இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்…போலீசார் விசாரணை

மகாராஷ்டிரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு இன்று மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் “ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல மும்பையில் பல்வேறு இடங்களில் மொத்தம் 11 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் உடனடியாக சென்று சோதனையிட்டனர். ஆனால் அந்த சோதனைகளில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த மிரட்டல் மின்னஞ்சல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News