பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து வால்பாறையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு, காலை மற்றும் மாலை நேரங்களில், நகரப்பேருந்துகள் இயக்கப்படும்.
நேற்று மாலை ஊசிமலை, வெல்லமலை ஆகிய கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அந்த கிராமங்களுக்கு செல்ல, வால்பாறையில் காத்திருந்தவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு, நிலைமை சீரடைந்தது.