இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்களும் போட்டி போட்டு சென்றதால் வயலில் ஒரு பேருந்து கவிழ்ந்து பயணிகள் படுகாயமடைந்தனர்.
மயிலாடுதுறையிலிருந்து தனியார் பேருந்து திருவாரூர் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்துக்கு முன்னால் மற்றொரு தனியார் பேருந்து சென்றுள்ளது.
இந்த நிலையில் இந்த தனியார் பேருந்து மற்றொரு பேருந்து முந்துவதற்காக வேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்கொடி என்ற பகுதியில் வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து பக்கவாட்டில் சாய்ந்து வயலில் விழுந்துள்ளது.
இந்த பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அங்கு அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐந்திற்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் காயம் பட்டவர்களை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றதால் இந்த விபத்து நடந்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.