முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநருக்கு இன்று ஒரு நாள் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது.
இந்த நிலையில், மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.