பொங்கல் பண்டிகை – 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

2025 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு (செப்.12) இன்று தொடங்கியது. இதையொட்டி இந்திய ரயில்வே நிர்வாகத்தின் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் டிக்கெட்களை முன்பதிவு செய்தனர்.

மேலும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் அதிகாலை முதலே காத்திருந்து முன் பதிவு செய்தனர்.

ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.

2025 ஜனவரி 10ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் ஜனவரி 11ஆம் தேதியில் பயணம் செய்வோர் செப்டம்பர் 13 அன்றும், ஜனவரி 12ஆம் தேதியில் பயணம் செய்வோர் செப்டம்பர் 14 அன்றும், ஜனவரி 13ஆம் தேதியில் பயணம் செய்வோர் செப்டம்பர் 15 அன்றும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News