தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டுயிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டப்பேர்வைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.