வக்பு நிலங்களை நிர்வகிக்கும் வகையில், வக்பு புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருந்தது.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, இந்த சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதன் அரசியலமைப்பு செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி, 72-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில், 5 மனுக்கள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று இந்த 5 வழக்குகளின் மீதான விசாரணை நடைபெற்ற போது, வழக்கு தொடர்பான விசாரணையை, புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு பட்டியலிடுமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும், மே 15-ஆம் தேதி வரை, புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.