தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் தன்னை தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கேரள மாநிலம் கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறியிருந்தார்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அது பொய் என்பது தெரியவந்தது. பாஜக தொண்டர் ‘சனல்’ என்பவர் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.