காஷ்மீர் மக்கள்.. ஆதரவாக பேசிய லெஃடினென்ட் மனைவி மீது விமர்சனம்.. பொங்கியெழுந்த மகளிர் ஆணையம்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று, தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், லெஃப்டினென்ட் வினய் நர்வால் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து, ஒரு சிலர், இஸ்லாமிய சமூகத்தினரையும், காஷ்மீர் மக்களையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதற்கிடையே, இந்த வெறுப்பு கருத்துகளுக்கு முற்றுப்புள்ள வைக்கும் விதமாக, வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், இஸ்லாமியர்களையும், காஷ்மீர் மக்களையும் குறி வைத்து, வெறுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு, நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பலர் ஹிமான்ஷி நர்வாலை கடுமையாக விமர்சித்து வந்தனர். இவ்வாறு இருக்க, ஹிமான்ஷி நர்வால் மீது வைக்கப்பட்ட சமூக வலைதள விமர்சனங்களுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கண்டனங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பெண் தன்னுடைய கருத்தை தெரிவித்ததற்காக விமர்சிக்கப்படுவது, ஒத்துக்கொள்ளவே கூடாத ஒன்று என்றும், தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மக்களின் உணர்வுகளுடன் ஹிமான்ஷி நர்வாலின் பார்வை ஒத்துப்போகவில்லை என்றும், ஆனால் கருத்துவேறுபாடுகளை அரசியல் சாசன எல்லைக்குள் தான் கையாள வேண்டும் என்றும், ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பெண்களின் கன்னியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய ஆணையம், ஹிமான்ஷி நர்வால் விமர்சிக்கப்பட்டது தொடர்பாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News