சேற்றில் சிக்கித் தவித்த பாஜக அமைச்சர் – வைரல் வீடியோ

நாகாலாந்து பாஜக மாநிலத் தலைவரும், சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங்கின், அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் டெம்ஜென் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வரும்போது சேற்றில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரால் கரையில் ஏறமுடியவில்லை. இதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை தூக்கிவிட முயன்றனர். இருந்தாலும் தானே எழுந்து வருவதாக கூறி, அடுத்த சில நிமிடங்களில் எழுந்து நின்று கரையை அடைந்தார்.

இதையடுத்து குளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அமைச்சர் சேற்றில் சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News