49 பெண்களை திருமணம் செய்ய முயற்சி…வசமாக சிக்கிய மோசடி மன்னன்

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சந்திரசேரபூர் எனும் பகுதியில் வசித்து வருபவர் சத்யஜித் (36). இவர் மேட்ரிமோனி தளங்களில் விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்று வேலைகளை செய்துள்ளார்.

இதுவரை 5 பெண்களை திருமணம் செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் 49 பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் அவர்களுடன் பேசி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் மிகவும் அதிக விலையுள்ள பொருள்களை பரிசாக கொடுத்து பிறகு அவர்களை தனது வலையில் விழ வைப்பார். சில பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உறவு வைத்துக்கொண்டதோடு பணத்தையும் மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து குற்றவாளியை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர். பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னை மேட்ரிமோனியல் தளத்தில் மணமகளாக பதிவு செய்து கொண்டார். அவரிடம் நைசாக பேசிய பெண் போலீஸ், அவரை புவனேஷ்வருக்கு வருமாறு கூறவே, அதனை நம்பி வந்த சமலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரை கைது செய்த போலீசார், சமலிடம் இருந்து 2.10 லட்ச ரூபாய் ரொக்கம், கார், மோட்டார்சைக்கிள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஒவ்வொரு முறையும் பெண்களை ஏமாற்றிய பிறகு துபாய் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News