மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருபவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் புத்தாண்டு தினத்தையொட்டி, ரத்த தானம் முகாம் ஒன்றில் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், மகாராஷ்டிரா மாநிலம், பல்வேறு நாடுகள் முதலீடு செய்வதற்கான சிறந்த மாநிலமாக உள்ளது என்று கூறினார்.
இது, தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடமாக மகாராஷ்டிரா உள்ளது என்பதை, வெளிக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த 2023-ஆம் ஆண்டில், டாவோஸ் கூட்டத்தில், 85 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஷிண்டே, பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தையும் பெருமையாக பேசியிருந்தார். அதனால், மும்பையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.