மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரே கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 40 பெண்கள் தங்கி உள்ளனர்.
இன்று அதிகாலை குளிர்சாதனப் பெட்டி ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டு, வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் மூச்சு திணறி இரு பெண்கள் உயிர் இழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அருகிலிருந்த திடீர் நகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.