சென்னை நெசப்பாக்கம் பெரியார் தெருவில் உள்ள கானுநகர் நகரில் வசித்து வருபவர் பலராமன் இவருடைய மகன் பிரதீப் மருந்து விநியோகஸ்தராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆன்லைன் வணிகம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் இன்று ஒரு நாள் மட்டும் மூன்று லட்ச ரூபாய் ஆன்லைன் சூதாட்டம் மூலம் இழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரதீப் தனது தாயிடம் செல்போனில் வருத்தத்துடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது போனை துண்டித்து விட்டு தனது அறைக்கு சென்ற பிரதீப் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது மின் விசிறியில் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிரதீப்பை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனை அடுத்து கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆன்லைன் வணிகம் மூலம் இன்று ஒரே நாளில் மூன்று லட்ச ரூபாய் இழந்ததும் நாளை நண்பர் ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் வணிகத்தில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.