தமிழகம் மற்றும் புதுச்சேரி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், திரைத்துறை பிரபலங்களும் காலை முதலே ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.