கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான குலசேகரம் முத்தாரம்மன் கோயில் நவராத்திரி திருவிழா கடந்த 23 தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் கணபதி ஹோமம், தீபாராதனை உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக புஷ்ப வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளிய முத்தாரம்மன், சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.