தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிரபலம் அடைந்தவர் பாலா.
இவர் ஒருசில திரைப்படங்களிலும், காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, சமூக சேவையும் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்த பாலா, சமீபத்தில் கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
அப்போது, அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது என்றும், தனது நீண்ட நாள் காதலியை தான் திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், பாலாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.