ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. சிறிய பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியிருந்தார். இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை, ரிஷப் ஷெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.
அதாவது, வரும் 27-ஆம் தேதி அன்று, 12.25 மணிக்கு, காந்தாரா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
மேலும், இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.