இயக்குநா் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான KGF இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாகவும் , விமா்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.இந்நிலையில் , இதன் மூன்றாம் பாகத்திற்கு ரசிகா்கள்மாபெரும் எதிா்பாா்ப்பில் காத்திருக்கும் நிலையில் ,இது குறித்து ரகசிய அப்டேட் தற்போது வெளிவந்து KGF ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து பிரசாந்த் நீல் வெளிப்படையாக மனம் திறந்துள்ளாா்.கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ஏற்கெனவே தயாராக உள்ளது. யாஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். ‘கே.ஜி.எஃப்’ மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யாஷ் இருப்பார். வாய்ப்பு இருந்தால் யாஷ் இந்தப் படத்தினை இயக்கவும் செய்வார்” எனக் கூறியுள்ளார் நீல். இதனை அறிந்த ரசிகா்கள் பலரும் இந்த ஷாக்கிங் அப்டேட்டை ஷோ் செய்து வைரலாக்கி வருகின்றனா்.