தெனாலி ராமன், எலி ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் இயக்குநர் யுவராஜ் தயாளன். எலி படத்தின் தோல்வியால், சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், இறுகப்பற்று படத்தின் மூலம், ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள படத்தை, ரசிகர்கள் பலரும் பார்த்துவிட்டு, தங்களது கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர்.
அதன்படி, இப்படம் கணவன்-மனைவி உறவுகளுக்கு இடையே உள்ள சிக்கல்களை பேசும், ஒரு சிறந்த ஃபீல் குட் திரைப்படம் என்று கூறி வருகின்றனர்.
திருமணமான தம்பதிகள் அனைவரும், குடும்பத்துடன் சென்று, ரசிக்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால், இளவயதினருக்கு இந்த திரைப்படம், பிடிக்குமா? பிடிக்காதா? என்றும் விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு சிறப்பான ஃபீல் குட் திரைப்படமாக இது உருவாகியுள்ளதாம்.