திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன் நகரில் வசித்து வந்த செல்வம் மற்றும் மீனா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. செல்வம் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது குழந்தை அழுததால் அந்த குழந்தையை வீட்டிற்கு வெளியே விட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தீபாவை செல்வம் சுவரோடு சேர்த்து தள்ளியதில் தலையின் பின்பக்கம் பலத்த காயம ஏற்பட்டு தீபா பேச்சு, மூச்சு இன்றி மயங்கி இருந்துள்ளார்.
இதில் தீபா இறந்து விட்டார் என்று பயந்துபோன செல்வம் அதே அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், வீட்டினுள் பார்த்த போது, செல்வம் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீபா கீழே படுத்த நிலையிலும் இருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீபாவுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீபாவும் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். கணவன் மனைவி உயிரிழந்த நிலையில் 2 வயது குழந்தை நிர்க்கதியாக நிற்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.