திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், வடபாதிமங்கலம், சேந்தமங்கலம், விக்கிரபாண்டியம், ராயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை இருந்துள்ளது.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.8) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News