மும்பை இந்தியன்ஸ் அணி செய்த மாற்றம் – முதலிடத்திற்கு மாறிய சென்னை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கரின் தலைமையில் இயங்கி வந்தது. சச்சின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து, ரோஷித் சர்மா தலைமையில், அந்த அணி செயல்பட்டு வந்தது. இவரும், சச்சின் டெண்டுல்கரை போல், இந்த அணியை சிறப்பாக வழிநடத்தி சென்ற ரோஷித் சர்மா, இதுவரை 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார்.

இவரது கேப்டன்சிக்கும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவ்வாறு இருக்க, 2024-ஆம் ஆண்டுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து, ரோஷித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, ஹர்திக் பாண்டியாவை, கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், நியமித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த அணியின் சமூக வலைதளப் பக்கங்களின் ஃபாலோவர்களின் எண்ணிக்கை, கனிசமான அளவில் குறைந்து வருகிறது. இதனால், அதிக ஃபாலோவர்களை கொண்ட, ஐ.பி.எல் அணியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

இதன்மூலம், ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக விளையாடி வந்தார்.

ஆனால், இந்த ஆண்டுக்கான ஏலத்தின்போது, குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது. இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி, பெரிய தொகை கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்திருந்தது. தற்போது, அவருக்கு கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News