கவுதம் கம்பீருக்கு வந்த இ -மெயில்.. ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் கௌதம் கம்பீர். இவர், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி, பாஜகவின் முன்னாள் எம்.பியுமான ஆவார்.

இந்நிலையில், டெல்லி ராஜீந்தர் நகரில் உள்ள காவல்நிலையத்தில், இன்று கௌதம் கம்பீர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் என்ற அமைப்பிடம் இருந்து, இ – மெயில் மூலமாக, கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், எனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று, அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு, 2021-ஆம் ஆண்டு அன்றும், கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News