சென்னையை அடுத்து உள்ள கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த சின்னா மற்றும் தினேஷ் என்பவர்களை உமாபதி கத்தியால் தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் கண்ணகிநகர் போலீசார் புஷ்பராஜ் மற்றும் சிலம்பரம் ஆகியோர் உமாபதியை நேரில் சென்று விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர். அப்போது உமாபதி மற்றும் அவரது நண்பர்கள் போலீசார் மீது கல் வீசியும், கையாலும் தாக்கியுள்ளனர்.
மேலும், உமாபதியின் நண்பர் ஒருவர் பீர் பாட்டிலை எடுத்து கீழே உடைத்து தனது வயிற்றில் குத்தியும் போலிசாரை குத்தவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது கண்ணிநகர் போலீசார் உமாபதி உட்பட மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்ணகி நகரில் கஞ்சா விற்பணை அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
போலீசாரை கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.