பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், ஓய்வூதியம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்திய பேரணி ஹரியாணா எல்லையில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்ததாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நவீன வாயுக் கவசம் உள்ளிட்டவைகளை அணிந்து தடுப்புகளை மீறி விவசாயிகள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு நடந்த போராட்டத்தைப் போல தற்போதைய போராட்டம் நீடித்து விடக் கூடாது என்பதால் இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.