தனுஷ், அஜித், ரஜினி, விஜய்சேதுபதி என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். இவர், கடை திறப்பு விழா ஒன்றிற்காக, நேற்று சென்றுள்ளார்.
திறப்பு விழாவை முடித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியபோது, ரசிகர்கள் பலரும் அவரை காண குவிந்துள்ளனர். அந்த சமயத்தில், முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர், நடிகையின் இடுப்புப் பகுதியில் கை வைத்து, அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மஞ்சு வாரியரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டவர், பெண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வைத்துள்ளதாகவும், எனவே, அது ஒரு பெண்ணாக கூட இருக்கலாம் என்றும், நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.