தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திரையுலக நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமாகிய சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் விஜயின் அரசியல் பயணத்தில் தானும் இணைய உள்ள்ளதாக கூறியுள்ளார். அதாவது, விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வருவதை நான் பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன். அவர் கூப்பிட வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நல்ல விஷயங்களுக்கு நான் எப்போதுமே கூட நிற்பேன்” என்று கூறியுள்ளார்.