என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக பெயர் எடுத்தவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொண்ட குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

மேலும் சென்னை அயோத்தி குப்பத்தில் ரவுடி வீரமணி என்பவரை என்கவுண்டர் செய்ததில் மிகவும் பிரபலமானார். இதேபோல் 12 ரவுடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரவுடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஆணையை உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர் சட்ட ரீதியாக சந்திப்பதாகவும் அவர் மீது எந்த தவறும் இல்லை என அவர் தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் குமார் என்கிற கொக்கி குமார் ரவுடி என்பவர் காவல் நிலைய கஸ்டடியில் உயிரிழந்தார். சம்பந்தமாக சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இதில் வெள்ளதுரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வரவுள்ளது.

இதையாடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று ஓய்வு பெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News