குருவிக்கு பதில் நாய்.. – ட்விட்டரில் முக்கிய அம்சத்தை மாற்றிய எலன் மஸ்க்!

உலகின் டாப் 10 பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்தவர் எலன் மஸ்க். இவர் கை வைத்த ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் பெரிய உச்சத்தை தொட்டதால், தற்போது இந்த நிலைக்கு சென்றுள்ளார்.

மிகவும் வித்தியாசமான விஷயங்களை பரிசோதித்து பார்க்கும் பழக்கம் உடைய இவர், நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கி, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தார்.

இதுமட்டுமின்றி, நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, ப்ளு டிக் பெறுவதற்கு கட்டணம் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய அம்சமாக இருந்த குருவி லோகோவை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக நாய் ஒன்றின் லோகோவை வைத்துள்ளார்.

இது மிகவும் பிரபலமாக உள்ள மீம்ஸ் ஒன்றில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. “ட்விட்டரை வாங்கிவிட்டோம்.. அதற்காக லோகோவை மாற்றிவிட்டோம்” எனும் ரீதியில், அவரது நடவடிக்கைகள் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

RELATED ARTICLES

Recent News