மின்சார வாரியம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய, அதிமுக உறுப்பினர் தங்கமணி, மின்சார வாரியத்தை மூன்றாக பிரித்து பசுமை எரிசக்திக்கு தனியாக ஒரு அமைப்பு உருவாக்க போவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே மின்சார வாரியம் கடனில் உள்ளது போன்று பசுமை எரி சக்தியை வைத்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தான் நினைப்பதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், மின்சார வாரியம் பொதுத்துறை நிறுவனமாகவே எப்போதும் செயல்படும் எனவும் தெரிவித்தார்.