தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் பழச்சாறு ஆகியவற்றை சாப்பிட்டு வருகின்றனர். வெயில் காலங்களில் நீர்ச்சத்து உணவுகளை தான் தேர்வு செய்து சாப்பிட வேண்டுமே தவிர, நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை தேர்வு செய்யக் கூடாது.
காரம் மற்றும் மசாலாக்கள் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகள் நெஞ்செரிச்சல், அசிடிட்டி ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் உடலில் உள்ள நீரை உறிஞ்சும்.
எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளும் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.
காபி, டீ, சோடா மற்றும் கார்பனேட்டட் பானங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றில் காஃபைன் சேர்க்கப்பட்டு இருக்கும். இவற்றையும் தவிர்க்க வேண்டும். இவை உடலில் மிகக் கடுமையாக நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.
வெயில் காலம் வந்துவிட்டால் ஜில்லுனு பியர் குடிக்க கிளம்பி விடுவார்கள். ஆனால் எந்த வகை ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, அது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே அதையும் தவிர்ப்பது நல்லது.