தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த 40 பேர், கடந்த 2-ந்தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது, 6 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில், தலா 3 லட்சம் ரூபாய், நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் ஆகியோர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.
அப்போது, அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலையை, கனிமொழி வழங்கினார்.