திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு மம்முட்டியுடன் சென்றார். தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த போது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து மாசி வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பித்து ஓடி உள்ளார். ஓடிக்கொண்டிருந்த மாசியை மர்மநபர்கள் விரட்டி விரட்டி தலை கழுத்து கை பகுதிகளில் கொடூரமாக வெட்டி உள்ளனர். இதில் மாசியின் ஒரு கை துண்டாகி தனியே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் வேடசந்தூர் திமுக பிரமுகர்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்ததால் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
குற்றவாளிகளை பிடிக்கும் வரை உடலை எடுக்கக் கூடாது என உறவினர்கள் ஆம்புலன்ஸ் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.