குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷா குப்தா. ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் Pre Release Event அன்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வந்த நடிகை தர்ஷா குப்தாவின் ஆடையை, அவரது உதவியாளர் காலால் மிதித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அவர், உதவியாளரை முறைத்து பார்த்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வந்தனர். இதுகுறித்து தர்ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் அவரை சாதாரணமாக தான் பார்த்தேன்.. அதனை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று கூறிய அவர், செய்தியாளர் சந்திப்பிலேயே கதறி அழுதுள்ளார். பின்னர், அங்கிருந்த செய்தியாளர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தனர்.