குடிநீர் விநியோகம் கோரி; கவுன்சிலர் போராட்டம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தேக்கம்பட்டி பகுதியில் இருந்து குடி தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யபட்டு வருகிறது.

இந்த நிலையில் காரமடை நகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

முறையற்ற குடிநீர் வினியோகம் குறித்து நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுவதாக குற்றம்சாட்டி திமுக வை சேர்ந்த வார்டு உறுப்பினர் கவுன்சிலர் நித்யா மங்களகரைபுதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் உள்ளூர் மக்களும் இணைந்து கொண்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட நித்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வநியோகம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

அப்போது கவுன்சிலர் நித்யா தனது வார்டு புறக்கனிப்படுவதாக கண்ணீருடன் புகார் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News