DD Next Level படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதனால், படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி, ரசிகர்கள் பலரும் காத்துக் கிடந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, வரும் மே 16-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும், இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News