ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர், இன்சப்ஷன், இண்டர்ஸ்டெல்லார், டெனட் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக ஓப்பன்ஹைமர் என்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம், 8 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து, மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான தகவல், தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்திற்கு தி ஒடிசி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம், வரும் 2026-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட பயணத்தை அடிப்படையாக கொண்டு, இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிக்கலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.