சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் துத்தி தொகுதியை சேர்ந்தவர் ராம்துலர் கோண்ட். இவர் கடந்த 2014ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் துத்தி தொகுதி பாஜக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு அளித்த நீதிமன்றம், ராம்துலர் கோண்டுக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இந்நிலையில் ராம்துலர் கோண்ட் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

Recent News