ஆசிய பசுபிக்கின் ஜனநாயக தலைவர்கள் என்ற மன்றத்தின் துணைத் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த மன்றத்தை, அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் சோரோன் நடத்தி வருகிறார். மேலும், இந்த நிறுவனம், காஷ்மீர் பிளவுவாதத்திற்கு ஆதரவானது என்றும் கூறப்படுகிறது.
இதனால், காங்கிரஸ் கட்சியை, பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவின் எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில், “ஜார்ஜ் சோரோஸை போலவே, ஒரு ஹங்கேரியனாக உள்ள ஃபோரி, ஜவஹர்லாலின் உறவினரான பி.கே.காந்தியை திருமணம் செய்துக் கொண்டார். ஃபோரியை ஜார்ஜ் சோரோஸ் சந்தித்திருப்பதாகவும், இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து இருந்ததாகவும், ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் இந்திய தூதராக பி.கே.நேரு இருந்த சமயத்தில் இருந்தே, இவர்கள் இருவருக்குமான தொடர்பு என்பது, மிகவும் நெருக்கமாக இருந்துள்ளது.
இவர்களது இந்த தொடர்பு, தங்களது லாபத்திற்காக, நாட்டின் நலனில் எந்த அளவுக்கு இவர்கள் சமரசம் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
