மாநில அரசின் வரி உயர்வு காரணமாக, கர்நாடக மாநிலத்தில், பீர் வகை மதுபானங்களின் விலை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பீர் வகை மதுபானங்களின் உற்பத்தி செலவில், 195 சதவீதம் வரியாக விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரி விகிதம் தற்போது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 205 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் கலால் வரியும், 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, உயர் ரக பிராண்டுகளின் பீர் வகை மதுபானத்தின் விலை, 10 ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடுத்தர வகையிலான பிராண்டுகளின் விலை, அதிகபட்சமாக 5 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பிராண்டுகளின் வகையை பொறுத்து, இந்த விலையேற்றம் அமையும் என்றும் கூறப்படுகிறது.