ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர், தற்போது நடிகர் சிம்புவின் அடுத்த படத்திற்கான பணிகளில், ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்துவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு, அவர் கதை ஒன்றை கூறியுள்ளார்.
இந்த கதை, கமல் ஹாசனுக்கு பிடித்துவிட்டால், இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இளம் வயதிலேயே, கமல் மாதிரியான ஜாம்பவான் உடன் கூட்டணி சேர்வது, அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.