சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறைகளை மாணவர்கள் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் (CECG) துறைசார் தலைவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியிருந்தார்.
மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். என்றும் அப்போதுதான் இன்றைய நாளுக்கு வருகைப்பதிவு கொடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.