கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இதில் 12 குழிகள் தோண்ட முடிவு செய்யப்பட்டு, இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டன. ஏற்கெனவே கண்ணாடி பாசிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, உடைந்த செம்பு உலோக்கத்தாலான பொருட்கள், யானை தந்தத்தால் ஆன ஆட்டக் காய்கள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில், தற்போது உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது. இது 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்டதாக உள்ளது.

பத்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த பானைகளே கிடைத்தன. இந்நிலையில் உடையாத சிவப்புநிற பானை கண்டறியப்பட்டது தொல்லியல் அதிகாரிகளிடையே மகிழ்சியை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News