வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை துரைசாமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள். இவரை காண்பதற்காக இளைய சகோதரி செல்லம்மாள்( 62) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கடந்த 18-ஆம் தேதி வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் தங்கிய செல்லம்மாள் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டின் மேற்கூறையில் உள்ள சுவர் திடீரென விழுந்துள்ளது. அதில் செல்லம்மாள் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் அவருடன் உறங்கி கொண்டிருந்த சகோதரி கண்ணியம்மாள் உடைய காலில் லேசான காயம் ஏற்ப்பட்டுள்ளது உடனடியாக தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் உயிரிழந்த செல்லம்மாளை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் காயம் பட்ட கண்ணியமாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.