நாடகம் மற்றும் சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் காலமானார்.
சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த அவர் 3500க்கும் மேற்பட்ட முறை நாடகங்களில் நடித்துள்ளார். எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் இயக்கிய நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் அன்றைய தூர்தர்சன் (டிடி) தொலைக்காட்சியில் வெளியான ‘அடடே மனோகர்’ என்ற இவரது நாடகங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.