குரங்கம்மை பாதித்த நாட்டிலிருந்து, இந்தியா திரும்பிய இளைஞருக்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கிளேட் – 2 வகை தொற்று இருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
கிளேட் – 1 வகை தொற்றுதான் ஆபத்தானது என்றும், ஆனால், இளைஞருக்கு கிளேட்-2 வகை தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய அரசு கூறிருக்கிறது.
இந்தியா திரும்பிய இளைஞரக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.