கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர் டி மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற வருகிறது. இதில் காளை மாடு முட்டியதில் இளைஞரின் ஒரு கண் பார்வை பறிபோனது
ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 225க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க காளையர்களும் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எவர்சில்வர்பாத்திரங்கள், ஃபேன், கட்டில் குக்கர், தங்க காசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது இரண்டாம் சுற்றும் முடிவு வரை 13 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்கள், 1 மாட்டின் உரிமையாளர் என 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இரண்டாம் சுற்று நிறைவடையும் நிலையில் இருந்த போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலை கம்பி ஓரமாக அமர்ந்திருந்த மாடு பிடி வீரர் வடசேரி பள்ளப்பட்டியை சேர்ந்த சிவகுமார் 21. என்ற இளைஞரை மாடு குத்தியதில் வலது கண் பார்வை பறிபோனது.
காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.