ஆர்டர் செய்த உணவில் எலி! – வைரலாகும் புகைப்படம்!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராஜீவ் சுக்லா கடந்த 8ம் தேதி இரவு மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் சைவ சாப்பாடு ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது சாம்பாரில் முழு எலி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் சென்றார். மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்தில் சாப்பாடு வாங்கிய பில், சாம்பாரில் கிடந்த எலி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படம் ஆகியவற்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகவும், அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News