சாலையோரத்தில் கிடந்த மனித மண்டை ஓடு – பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார், அங்கு மனித மண்டை ஓடு, எலும்புக்கூடுகள் இருப்பதை உறுதி செய்தனர்.

எலும்புக்கூடுகளை கைப்பற்றிய போலீசார் இந்த எலும்புக்கூடுகள் மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளனரா? அல்லது கொலை சம்பவம் எதுவும் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News